ஒடிசா மாநிலம் பலாச்சூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கல்லூரியான பகிர் மோகன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி 20 வயதான சோனி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) படிக்கும் போதே பொறுப்புடன் இருந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அதே போல் கல்லூரி முடிந்து அருகில் உள்ள கடையில் பகுதி நேர வேலைகளை பார்த்து கொண்டு வீட்டுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார். தினமும் குடும்பத்துடன் போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள் குடும்பத்தாருக்கு போன் செய்தாலும் அவர்கள் போன் செய்தால் எடுக்காமலும் இருந்து வந்துள்ளார் மாணவி. இதனால் பயந்த பெற்றோர்கள் சோனியுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவிக்கு போன் செய்து சோனி பற்றி விசாரித்துள்ளனர். அப்போது “சோனி ஒரு வரமாக சோகமாக தான் இருக்க யார் கிட்டையும் பேச கூட இல்லை” என கூறியுள்ளார். இதனை கேட்டு உடனடியாக விடுதிக்கு சென்ற பெற்றோர்கள் சோனியிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளனர்.
அதற்கு அழுதுகொண்டே பதிலளித்த சோனி கல்லூரியில் தனது துறை தலைவராக பணிபுரியும் பேராசிரியரான சமீரா குமார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், வெளியில் கூறினால் டிகிரி முடிக்க விட மாட்டேன், என மிரட்டியதாகவும், மேலும் இரவு நேரங்களில் வீடியோ கால் செய்து நிர்வாணமாக வீடியோ கால் பேச சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் தான் சென்று கல்லூரி நிர்வாகத்தினரிடம் சமீரா குமார் குறித்து புகாரளித்தும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் தங்களது உறவினர்களின் உதவியுடன் கல்லூரி நிர்வாகத்தை முற்றுகையிட்டு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இத்தனையும் கல்லூரி நிர்வாகம் அலட்சியப் படுத்தியதால் மனமுடைந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திலேயே தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து தீ அணைக்க சென்ற மாணவனுக்கும் உடலில் தீ பற்றியுள்ளது. எனவே அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்ட போது “ சமீரா குமார் மீது நாளை தான் நடவடிக்கை எடுக்க இருந்தோம்” என நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளது. தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்த சமீரா குமார் தலைமறைவாகியுள்ளார். போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தீக்குளித்த மாணவி 85 சதவீத தீக்காயத்துடனும், காப்பாற்ற சென்ற மாணவன் 75 சதவீத தீக்காயத்துடனும் புவனேஸ்வரி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவி கல்லூரி நிர்வாகத்திலேயே தீ குளித்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.