க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் | உத்திரமேரூர் வட்டத்தை சேர்ந்த அதவபாக்கம் கிராம ஊராட்சி புதிய காலனியில் வசிப்பவர் வேங்கப்பன். அவரது வயது 65. இவர் தனது உறவினர் இறப்பு நிழச்சிக்காக நேற்று மாலை அருகில் உள்ள புலிவாய் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இறப்பு நிகழ்ச்சியில் தனது உறவினர்களுடன் மது அருந்திய நிலையில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது மனநலம் குன்றிய பெண் இருந்ததை கண்டு அப்பெண்ணிடம் அத்து மீறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

அப்பெண்னின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்த உடன் முதியவர் வேங்கப்பன் அப்பகுதியில் இருந்து வேகமாக வெளியேறி சென்றுள்ளார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் , பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி சந்திரசேகர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வேங்கப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் வேங்கப்பன் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. அறிந்து தற்கொலை முயற்சியினை மேற்கொண்டு உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மது போதையில் மன நலம் குன்றிய இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்தது இருதரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.