Perambalur Two Deaths Case 
க்ரைம்

“ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்” - ஈரோடு கார் பயணத்தில் நடந்தது என்ன?.. நண்பர்கள் மரணத்தால் ஒளிந்திருக்கும் மர்மம்!

குடிபோதையில் காரில் உறங்கி கொண்டிருந்ததால் வந்துவிட்டேன் அவரே போதை தெளிந்ததும் வந்துவிடுவார் என கூறியுள்ளார்...

Mahalakshmi Somasundaram

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் 27 வயது இளைஞர் மற்றும் 45 வயது நபர் என அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதுடைய மூர்த்தி. அதே பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதுடைய வரதராஜன். இருவரின் வீடு ஒரே பகுதியில் அமைந்திருந்த நிலையில் இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்திருக்கின்றனர். மேலு மூர்த்தி வாடகைக்கு கார் ஒட்டு வந்த நிலையில் வரதராஜன் தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் போது மூர்த்தியுடன் அவரது காரில் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

வரதராஜனுக்கு திருமணமாகி கல்லூரி பயிலும் மகள் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ள நிலையில் மூர்த்திக்கு இன்னும் திருமணமாகவில்லை என சொல்லப்படுகிறது. வழக்கம் போல தொழில் ரீதியாக கடந்த (நவ 14) ஆம் தேதி, ஈரோடு செல்ல வேண்டும் எனக் கூறி வரதராஜன், மூர்த்தியை அழைத்துக்கொண்டு திருப்பூர் சென்றுள்ளார். பின்னர் வரதராஜன் மட்டும் இரண்டு நாட்களில் வீடு திரும்பியுள்ளார். மூர்த்தி குறித்து கேட்டபோது அவர் குடிபோதையில் காரில் உறங்கி கொண்டிருந்ததால் வந்துவிட்டேன் அவரே போதை தெளிந்ததும் வந்துவிடுவார் என கூறியுள்ளார்.

Perambalur Two Deaths Case

திருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் கார் நிற்பதை பார்த்த போலீசார் காரை திறந்து பார்த்த போது அதில் மூர்த்தி காயங்களுடன் காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மீட்ட போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மூர்த்தியின் தாயார் மலர் அளித்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தின் அடிப்படையில், மூர்த்தி தனது தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த (நவ 21) ஆம் தேதி மாலை 6 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்கிட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த போலீசார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, நேற்று (நவ 22) அதிகாலை 6 மணியளவில் வரதராஜனும் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரம்பலூர் ஊரக போலீசார், இவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததற்கான காரணம் என்ன, திருப்பூரில் மூர்த்தி காயங்களுடன் இருந்த சம்பவத்திற்கும் இந்த உயிரிழப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? அல்லது இவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஏதாவது பிரச்சினை இருந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.