க்ரைம்

சிவகங்கையில் ஒருவர் வெட்டிப் படுகொலை!

Malaimurasu Seithigal TV

சிவகங்கையில் இளைஞர் ஒருவரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காளவாசல் பகுதியில் உள்ள கோயிலில் பூச்செரிதல் விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை பார்க்க அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர், அங்கு  சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்த மர்ம கும்பல் அவரை  ஓட, ஓட விரட்டி வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இதில், பரமசிவம் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இக்கொலை தொடர்பாக, காவல்துறையினர் உசிலம்குளத்தைச் சேர்ந்த ஆனந்தம்,  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையி்ல புதூரைச் சேர்ந்த ரிஷி குமார் , பரணி குமார், கார்த்திக் ராஜா மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளனர்.