க்ரைம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி!

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளார்.

அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜியின் சிகிச்சை குறித்த ஓமந்தூரார் மருத்துவர்களின் அறிக்கை, அமலாக்கத்துறையினரின் உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.