க்ரைம்

என்ன காரணம்? கணவரை பிாிந்து வாழ்ந்து வந்த பெண்ணை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!

நெல்லை அருகே பெண் ஒருவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Tamil Selvi Selvakumar

பணகுடி உத்தமன் சன்னதி தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தெய்வநாயகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில் தெய்வநாயகி வழக்கம் போல், தனது வீட்டு முன்பு நின்று கொணடிருந்த போது, அடையாளம் தொியாத  4 பேர் கொண்ட  மா்ம கும்பல்,  தெய்வநாயகியை கத்தியால் சரமாரியாக தாக்கி அங்கி இருந்து தப்பித்து சென்று விட்டனா்.

இதனையெடுத்து அவரை மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.