க்ரைம்

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் மனைவியிடம் 85 சவரன் நகை மோசடி..! பெண் உட்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் மனைவியிடம் 85 சவரன் தங்க நகைகளை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதனின் மனைவி விஜயலட்சுமி. இவர் தனது தோழியான விஜயகுமாரியின் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவிற்காக பணம் தந்து உதவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயலட்சுமி தனது மகளின் திருமணத்திற்காக தான் கடைசியாக கொடுத்த 85 சவரன் நகைகளை தனது தோழியிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமாரி முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ளவும் முடியாமல் இருந்தநிலையில், இது குறித்து விஜயலட்சுமி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விஜயகுமாரி உள்ளிட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.