க்ரைம்

300 மதுபாட்டில்களை பதுக்கிய 2 பெண்கள் அதிரடியாக கைது!!

சென்னையில் மதுபாட்டில்களை பதுக்கிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Tamil Selvi Selvakumar

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து அந்த வீட்டில் சோதனை செய்த போலீசார் அங்கு இருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், செல்வி என்பவரையும் கைதுசெய்தனர்.