க்ரைம்

காளி தேவி கோவிலில் மதத்தின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட மர்ம நபர் அதிரடியாக கைது!!

Tamil Selvi Selvakumar

பஞ்சாப்பில் புகழ் பெற்ற காளி தேவி கோவிலில் மதத்தின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்துக் கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் புகழ் பெற்ற காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு சாமி வழிபாட்டின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருக்க அப்போது எதிர்பாராத விதமாக வந்த நபர் ஒருவர் காளி தேவி சிலையை நெருங்க பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மத உணர்வை புன்படுத்தும் வகையிலும் கோவிலின் மாண்பை கெடுக்கும் வகையிலும் நடந்துக் கொண்ட அந்நபரின் செயல் கோவிலில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.