க்ரைம்

போலீசார் போல் நடித்து நூதன முறையில் பணம் கொள்ளை- டிப்டாப் ஆசாமிகளுக்கு வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பட்டப்பகலில் போலீசார் என கூறி நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அச்சகங்களில் பத்திரிக்கைகளை மொத்த ஆர்டராக வாங்கி பணம் வசூல் செய்யும் தொழிலில் கடந்த 23 வருடங்களாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திண்டிவனத்தில் உள்ள சில அச்சகங்களில் பத்திரிக்கை வழங்கியநிலையில் அதற்கான காசோலை 55 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து விட்டு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரை நோட்டமிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்குள்ள மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த பூலாலனை ஒருவர் வழிமறித்து நான் போலீஸ் உன்ன அய்யா கூப்பிடுகிறார் என்று மற்றொரு நபரிடம் பூபாலனை அழைத்து சென்றுள்ளார் அந்த நபர். அவர்  அருகில் சென்ற பூபாலனை அங்கு நின்றிருந்த ஆசாமி யாருய்யா நீ? எங்கே போற.? பேக்குல என்ன கஞ்சா வா வச்சிருக்க? உன் மூஞ்சே சரியில்லேயே? என போலீஸார் போல் விசாரணை செய்து மிரட்டியுள்ளனர்.

பின்னர் அவர் வைத்திருந்த பணப்பையை வாங்கி சோதனை செய்து அவரை அனுப்பியுள்ளனர். சிறிது துரம் சென்ற பூபாலன் சந்தேகத்தின்பேரில் பையை திறந்து பார்த்துள்ளார். அதில் பணம் இல்லை என்பதையறிந்த அவர், போலீஸ் போல் நடத்து தன்னிடம் விசாரணை என்ற பெயரில் இரு ஆசாமிகள் ஏமாற்றியுள்ளனர் என்பதை அப்போது தான் புரிந்து கொண்டார் பூபாலன்.

பணத்தை பறிகொடுத்துவிட்டோமே என புழம்பியவாறே காவல்நிலையம் சென்ற பூபாலன் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரில்பேரில் வழ்க்குபதிவு செய்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.