க்ரைம்

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வேன் ஓட்டுநர்...மடக்கி பிடித்த போலீசார்!!

Tamil Selvi Selvakumar

சென்னையில் உள்ள ரேஷன் கடையில் இருந்து கடத்தப்பட்ட ஆயிரத்து 500 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரம்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில்  அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் போலீசார் பிபி ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வேன் ஓட்டுநர்  செந்தில் குமாரை கைது செய்த போலீசார்,  ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.