சென்னை புரசைவாக்கம் பகுதியில் ரகசியமாக ஹுக்கா பார் நடத்தப்படுவதாக வேப்பேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அந்த இடத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டபோது அங்கு ஹுக்கா பார் நடத்தி வருவது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து ரகசியமாக தடைசெய்யப்பட்ட ஹுக்கா பார் நடத்தி வந்த அதன் மேலாளர் மனிஷ் ஜோஷி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அந்த இடத்தில் இருந்து 5 ஜாடிகள், 10 ஹுக்கா பைப்புகள் மற்றும் சுமார் 2 கிலோ ஹுக்கா ஃபிளேவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹுக்கா பாரின் மேலாளர் மனிஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை எச்சரித்து காவல் நிலைய ஜாமினில் அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | சத்யா வழக்கு: சக மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்ற சிபிசிஐடி போலீஸார்!அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?