க்ரைம்

கஞ்சா வாங்கி வர சொல்லும் போலீசார் - ஆடியோ வெளியாகி பரபரப்பு!!

போலீசார் ஒருவரிடம் கஞ்சா வாங்கி வர சொல்லும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விசாரணைக்கு சென்றவர் மீது வழக்கு பதிவு செய்வதற்காக போலீசார் ஒருவரிடம் கஞ்சா வாங்கி வர சொல்லும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவகோட்டை இம்ரான் நகரை சேர்ந்த இஸ்மாயில் விசாரணைக்காக தேவகோட்டை நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு 2 பாக்கெட் கஞ்சா கொண்டு வர வேண்டும் எனவும் ஆய்வாளர் சரவணன் கூறியுள்ளார். இதுகுறித்து ஆய்வாளரின் ஓட்டுநர் காவலர் ஆரோக்கியசாமி, முகமது இஸ்மாயில் என்பவருடன் பேசும் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.