க்ரைம்

கறிக்கடை ஊழியரை பூட்ஸ் காலால் மிதித்த போலீஸ்..! வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!  

செங்கல்பட்டில் முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கறிக்கடை ஊழியரை, போலீசார் பூட்ஸ் காலால் மிதித்து, சித்தரவதை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டில் முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கறிக்கடை ஊழியரை, போலீசார் பூட்ஸ் காலால் மிதித்து, சித்தரவதை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோவும், மற்றொரு காவலரும், பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியில் உள்ள கோழிக்கறி கடைக்கு சென்று, கடை ஊழியரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கடை ஊழியரின் காலை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசார், அவரது கால் மீது ஏறி நின்று கொடூரமாக தாக்கி, பூட்ஸ் காலால் உதைத்து, துன்புறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடை ஊழியர் முகக்கவசம் அணியாததால் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் கூறும் நிலையில், போலீசாரின் கொடூர செயலை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், போலீசாரின் அரக்கத் தனத்திற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உதவி ஆய்வாளர் கையில், ரவுடிகள் பயன்படுத்தும் கத்தி இருக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.