ஒரு பெண் தனது காதலனின் ஆணுறுப்பைத் துண்டித்து, அதை ஒரு குப்பைத் தொட்டியில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் அவரது காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியாக, அவர் அந்த காயத்திற்கு மருந்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 2024-ம் ஆண்டில் தனது காதலரான 38 வயது டஸ்டின் நால்ஸைக் கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடல்களைச் சிதைத்தது தொடர்பான குற்றத்திற்காக, 34 வயதான அவரது காதலி ஷென்டிங் குவோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டுள்ளார்.
அமெரிக்கவின் கொலராடோவின் கிராண்ட் ஜங்ஷனில் உள்ள வுட்ஸ்பிரிங் சூட்ஸ் ஹோட்டலில் தனது காதலனைக் கொலை செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து குவோ கைது செய்யப்பட்டுள்ளார். மே 2024-ல் சம்பவ இடத்திற்கு வந்த முதலுதவிப் பணியாளர்கள், நால்ஸ் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டறிந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற தகவலை தன் காதலனிடம் தெரிவித்துள்ளார். இந்த ஒரு வார்த்தையினை தொடர்ந்து, அவரது காதலிக்கும் நால்ஸுக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் குவோ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை நால்ஸ் தானா? என்பது குறித்து அவர்களுக்குள் தகராறு வெடித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
பிறக்கப்போகும் குழந்தை தன்னுடையது அல்ல என்று நால்ஸ் கூறியதால் ஆத்திரமடைந்த அப்பெண், அவரது காலில் கத்தியால் குத்தியதாக கைது ஆணைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அப்பெண், நால்ஸின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றதாகவும், கத்திக்குத்துக்குப் பிறகு அவர் சுயநினைவை இழந்தது போலத் தெரிந்ததாகவும் அவரது காதலி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நால்ஸ் தூங்குவது போல் நடிக்கிறாரா? என்பதை உறுதி செய்வதே குவோவின் நோக்கமாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் நால்ஸின் ஆணுறுப்பைத் துண்டித்து குளியலறை குப்பையில் வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த நபரின் ஆணுறுப்பை அகற்றியதைத் தொடர்ந்து, அருகிலுள்ள ஒரு கடையில் சில மருந்துகளை வாங்கி தனது காதலனுக்கு முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது.
இருந்தும் எதுவும் பயனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். 34 வயதான அந்தப் பெண் மீது, உடல் காயம் ஏற்படுத்துதல், கவனக்குறைவாக மற்றொருவரின் மரணத்தை விளைவித்தல், தெரிந்தே ஒரு சடலத்தை அவமதித்தல் உட்பட பல குற்றசாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேசா கவுண்டி தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குவோவுக்கு, தற்போது மனநலம் சம்மந்தப்பட்ட சோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய குவோ, "அவரைக் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை" என்றும், ஆனால் ஆத்திரத்தின் உச்சத்தில் தாக்குதலை நடத்தியதாகவும் குவோ கூறியதாக ஒரு கைது பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்