க்ரைம்

காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி...

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருச்சி | தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவருடன் பணியாற்றும் நண்பர்கள் நான்கு பேர் சுற்றுலா வந்திருந்தனர். இன்று முக்கொம்பு காவிரி ஆற்றில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ராஜசேகரன் மற்றும் அவரது நண்பர் கீர்த்திவாசன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர்.

கீர்த்தி வாசனை அங்கு இருந்த பொதுமக்கள் பலரும் உயிருடன் மீட்ட நிலையில், ராஜசேகரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் போலீஸா இருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர் ராஜசேகரை சடலமாக மீட்டனர்.

ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.