க்ரைம்

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் : உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!!

திருவள்ளூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த மசாஜ் சென்டர் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் மாவட்டம்  காக்களூர் பகுதியில் சரண்யா என்பவருக்கு சொந்தமான சலூன் மற்றும் ஸ்பா கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த சலூனில் விபச்சாரம் நடப்பதாக திருவள்ளூர் தாலுகா காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  இரவு போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து   கடையின் உரிமையாளர் சரண்யா,  அபிராமி என்கிற பிரியா, ரபிக் மற்றும் இஸ்ரா அலி ஆகிய 4 பேரை கைது செய்து நள்ளிரவு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ரபிக் மற்றும் இஸ்ரா அலி ஆகியோர் திருவள்ளூர் கிளைசிறையிலும், உரிமையாளர் சரண்யாவை புழல் சிறையிலும் அடைத்தனர், மேலும் அபிராமி என்கிற பிரியாவை பெண்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.