க்ரைம்

கைதான பப்ஜி மதன்... ஜூலை 3 வரை சிறை.. வெளிவருமா திடுகிடும் தகவல்கள்

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை கோர்ட்.

Malaimurasu Seithigal TV
பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை யூ-டியூப்பில் பதிவிட்டு வந்தவர் மதன். பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக மதனின் வீடியோக்கள் இருப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து பப்ஜி மதன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு தேடி வந்தனர்.
வி.பி.என் சர்வரை பயன்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தர்மபுரியில் உறவினரின் வீட்டில் வைத்து கைது செய்து நேற்றிரவு சென்னை காவல் ஆணையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் விடிய விடிய பப்ஜி மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மதனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
பப்ஜி மதனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று மதியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பப்ஜி மதனை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதிகோரிய நிலையில் ஜூலை 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பப்ஜி மதன் இன்று சிறையில் அடைக்கப்படுகிறார்.