80-year-old woman case 80-year-old woman case
க்ரைம்

"ஆடுமேய்க்கும் 80 வயது மூதாட்டியை கடித்து குதறி பாலியல் தொல்லை!" தர்ம அடி அடித்த பொதுமக்கள் - தீவிர விசாரணையில் போலீசார்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதியில் குடிபோதையில் வந்த நபர் மூதாட்டி என்றும் பாராமல் தவறாக நடந்துள்ளார்.

Vinvizhi Leninton

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 80 மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபருக்கு அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். மூதாட்டி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதியில் குடிபோதையில் வந்த அந்த நபர் மூதாட்டி என்றும் பாராமல் தவறாக நடந்துள்ளார். மேலும், மூதாட்டியை கடித்து குதறி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அந்த பக்கமாக சாலையில் சென்றவர்கள் பார்த்து சத்தமிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அங்குள்ள மக்கள் அந்த நபரை துரதிபிடித்து அடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரிடம் குற்றவாளியை அப்பகுதி மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், அங்கு மூதாட்டியை சூழ்ந்திருந்த மக்கள் நடந்ததை காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு கூறினார். மேலும், மூதாட்டி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தன்னை பலவந்தமாக பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொடூரமாக தன்னை கடித்ததாகவும் மூதாட்டி காவல்துறையினரிடம் கூறினார். மேலும், அங்கு கூடியிருந்த மக்கள் "மூதாட்டி இறந்திருந்தால் என்ன செய்வது, இவரை கட்டாயம் சிறையில் அடைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை நாகூர் போலீசார் பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த நபர் எந்தப் பகுதியை சேர்ந்தவர்? என்று நாகை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி குற்றம்சாட்டப்பட்டவரிடம் நேரில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நாகை அருகே பட்டப்பகலில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.