புதுச்சேரி மாவட்டம், லாஸ்பேட்டை கருவடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய பிரதாப். கூலித் தொழிலாளியான இவர் இன்று காலை லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை கொள்ளிமேடு மைதானம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதாபின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது பிறந்தபின் நண்பர்களே அவரை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. பிரதாப்பும் அவரது நண்பர்களான வினோத், கிருஷ்ணகுமார், பழனி மற்றும் அவரது காதலியுடன் சில தினங்களுக்கு முன்பு வேறு ஒரு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அனைவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது பிரதாப் வினோத் மற்றும் கிருஷ்ணகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் மற்றும் வினோத் பிரதாப்பின் காதலயிடம் வம்பிழுத்து உள்ளனர். இதனால் மாறி மாறி வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர்.
சண்டையின் போது பிரதாப், வினோத் மற்றும் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து “உங்களை கொலை செய்துவிடுவேன்” என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே வினோத் குமார் பிரதாப் தன்னை கொலை செய்வதற்கு முன் தான் கொலை செய்துவிட வேண்டும் என எண்ணிய வினோத தனது நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் பழனியின் உதவியுடன் பிரதாப்பை மது அருந்த அழைத்து பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ததது தெரியவந்துள்ளது. வாலிபர் ஒருவர் சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.