ராமேஸ்வரம் வெண்மணி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் நம்புராஜா இவர்கள் இருவரும், வெங்கடேசன் வீட்டுக்கு அருகாமையில் அமர்ந்து நண்பர்களோடு சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.
அதோ போல மது அருந்துவதற்காக வந்த நம்புராஜன், வெங்கடேசன் வீட்டில், யாரும் இல்லாத நேரம் பார்த்து வெங்கடேசன் தங்கையிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் நம்புராஜனை பலமாக தாக்கியதில், நம்புராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் நம்புராஜனின் உடலை மறைப்பதற்காக அவரது வீட்டிற்கு அருகாமையிலேயே குழி தோண்டி, நம்புராஜனை வெங்கடேசன் யாருக்கும் தெரியாமல் புதைத்து, அந்த இடத்தின் மீது தேவையற்ற பொருட்களை போட்டு மறைத்துள்ளார்.
நண்பர் வீட்டிற்கு சென்ற நம்புராஜன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், நம்பு ராஜன் வீட்டார் சார்பில் ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்தில் சகோதரரை காணவில்லை, என நம்புராஜன் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 30 நாட்கள் கழித்து இன்று வெங்கடேசனை பிடித்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது, அவர் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது சம்பவ இடத்தில் மோப்ப நாயின் உதவியுடன், புதைக்கப்பட்ட நபரை தோண்டி எடுக்கும் பணியில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் வெண்மணி நகர் பகுதியில் ஒருவரை அடித்து புதைக்கப்பட்ட சம்பவம், தற்போது அப்பகுதி மக்களுடைய ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்