ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கள் கிராமம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் ஹரி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய செல்வி என்பவருக்கும் கடந்த பல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஹரி செல்வம் தம்பதிக்கு ஐயப்பன், செல்வம், அரவிந்த் என மூன்று மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக செல்வியை விட்டு பிரிந்து ஹரி தனித்து வாழ்ந்து வருகிறர். செல்வி தனது மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில் ஐயப்பன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார்.
மூன்றாவது மகனான 20 வயதுடைய அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். எனவே தாய் செவி தனது இரண்டாவது மகனான 22 வயதுடைய செல்வதுடன் செட்டிதாங்கள் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். சொந்த ஊரில் எலக்ட்ரீசியன் கடை வைத்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தொடர்ந்து இரவு வேலை முடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு செல்லும் செல்வம் அவரது தாய் செல்வியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது தாய் செல்வி மற்றும் அண்ணன் செல்வதை பார்க்க சொந்த ஊருக்கு சென்றுள்ளார். நேற்று இரவு உணவருந்திவிட்டு அரவிந்த் வீட்டிற்குள் படுத்து தூங்கிய நிலையில் தாய் செல்வி வெளியில் உள்ள திண்ணையில் உறங்கியுள்ளார். அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த செல்வம் வழக்கம் போல் தாய் செல்வியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
செல்வம் அடித்த அடியின் வலி தாங்க முடியாமல் தாய் செல்வி சத்தமிட்டு நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அரவிந்த் வெளியில் வந்து பார்த்துள்ளார். செல்வம் தாய் செல்வியை அடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அரவிந்த் செல்வதை கண்டித்துள்ளார். அதற்கு செல்வம் “சின்ன பையன் எல்லாம் பேச கூடாது” என கூறி அலட்சியமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார்.
அண்ணன் உயிரிழந்ததை அறிந்த அரவிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் தனது அண்ணன் “உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்” என கூறி அவசர அவசரமாக இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அரவிந்தின் செயலில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வீட்டில் இருந்த ரத்தக் கறைகள் கவனித்த போலீசார் சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் செல்வத்தின் தம்பி அரவிந்த் தனது அண்ணனை கொலை செய்தது தெரிவந்துள்ளது. எனவே அரவிந்தை கைது செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட அண்ணனை கழுத்தை அறுத்து தம்பியே கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.