chrompet  
க்ரைம்

“பெண்ணிடம் அத்துமீறிய ரேபிடோ ஓட்டுநர்” - தொடை மீது கை வைத்து பாலியல் சீண்டல்.. குரோம்பேட்டை செல்லும் வழியில் நடந்தது என்ன?

அமர்வதற்கு வசதியாக இல்லை என்றால் எனது தோளின் மீது கை வைத்து பிடித்துக் கொள்ளலாமே..

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 27 வயத்துடைய வாலிபர் பிரவீன் குமார். பட்டதாரியான இவர் பல்லாவரத்தில் மூக்கு கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகின்றார். காலை முதல் மாலை வரை கடையில் இருக்கும் பிரவீன் இரவு நேரங்களில் பகுதி நேரமாக ரேபிடோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல நேற்று கடையை மூடிவிட்டு பகுதி நேர வேலை பார்த்து கொண்டிருந்த பிரவீனுக்கு புக்கிங் குறுஞ்செய்தி ஒன்று வந்ததுள்ளது. அதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து குரோம்பேட்டைக்கு அழைத்து செல்ல வேண்டும் என காட்டியுள்ளது.

உடனே பிரவீன் லொகேஷன் காட்டிய ஈக்காட்டுத்தாங்களுக்கு சென்று அங்கு ரேபிடோ புக் செய்த சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்மணி இரண்டு பெரிய பைகளுடன் குரோம்பேட்டை செல்ல வேண்டும் என கூறியதும் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு ஒரு பையை வாகனத்தின் முன்பகுதியில் வைத்தும்,மற்றொரு பையை அந்தப் பெண் கையில் வைத்தும் அமர்ந்து கொண்ட நிலையில் பிரவீன் வாகனத்தை இயக்க தொடங்கியுள்ளார். அப்போது பிரவீன் அமர்வதற்கு வசதியாக இல்லை என்றால் எனது தோளின் மீது கை வைத்து பிடித்துக் கொள்ளலாமே என கூறியதோடு அந்த இளம் பெண்ணின் தொடையில் பிரவீனின் பாலியல் சீண்டலில் ஈடுபடும் விதமாக கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண்மணி இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு குரோம்பேட்டை அருகே இறங்கி அழுது கொண்டே சென்று உள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் பிரவீன் குமாரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு,எனது தோழியிடம் நீங்கள் தவறாக பேசியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி உங்களிடம் பேச வேண்டும் குரோம்பேட்டை வருமாறு அழைத்துள்ளார். அதன்படி பிரவீன் குமார் சென்றபோது,அந்த பெண்மணியுடன் இருந்த ஐந்து நபர்கள் சேர்ந்து பிரவீன் குமாரை சரமாரியாக கையால் தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரவீன் குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீனுக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பெண் மற்றும் பிரவீன் குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரவீன் குமார் உண்மையில் இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.