க்ரைம்

துபாய்க்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு...உடலை மீட்டு தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை!

Tamil Selvi Selvakumar

காரைக்காலில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் உடலை மீட்டு தரக்ககோரி  உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழ காசாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு  நடனமாடி வந்துள்ளனர்.

அந்த வகையில் தேவதாசின்  இரண்டாவது மகள் அருணா, திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு மூலமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம்  துபாயில் உள்ள அபுதாபிக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் நடனமாடி வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வீட்டில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து வீடு திரும்புவதகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அருணா உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்து விட்டதாக  தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், துபாய்க்கு வேலைக்காக சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அருணாவின் உடலை மீட்டு தரக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.