க்ரைம்

வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை, ரூ. 50,000 பணத்தை திருடி சென்ற உறவினர்...

ஆவடியில் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற உறவினர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

ஆவடி பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவர் வேலூரில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில்  உடல் நலக்குறைவால்  பாதிக்கப்பட்ட மனவைி தனலட்சுமியை பார்த்துக்கொள்ள தனது சகோதரியின் மகள்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள்  வீட்டில் தங்கி இருந்த நிலையில் 30 சவரன் நகை மற்றும் வங்கி கணக்கில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள உமா மகேஸ்வரி மற்றும் பூர்ணிமாவை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.