சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி மிட்டாகாடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்லப்பன். இவர் அதே பகுதியில் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இரண்டு மகன்கள் இருந்த நிலையில் மகள்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகனுக்கு 32 வயதாகும் நிலையில் திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். தனது வீட்டிற்கு வெளியில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி மர்மமான முறையில் செல்லப்பன் கொட்டகையில் உயிரிழந்து கிடந்துள்ளார். காலையில் செல்லப்பன் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அவரது மனைவி மற்றும் மகன்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்லப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து செல்லப்பனின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனையின் போது செல்லப்பன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்திய போது செல்லப்பன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் கந்தம்பட்டி திரௌபதி அம்மன் தெருவை சேர்ந்த பிரபு என்ற ரவுடிக்கும் தகாத உறவு இருந்ததை அறிந்து கொண்ட செல்லப்பன் அதனை கண்டிக்காமல் தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணியுள்ளார்.
அதன்படி பக்கத்துக்கு வீட்டு பெண்ணிடம் சென்று செல்லப்பன் “உனக்கும் பிரபுவிற்கு உள்ள உறவு எனக்கு தெரியும் இதை பற்றி நான் வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்னுடன் நீ தனிமையில் இருக்க வேண்டும்” என மிரட்டியுள்ளார் இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையிலும் செல்லப்பன் விடாமல் அவரை தொந்தரவு செய்து வந்தார் என சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் செல்லப்பன் தன்னை மிரட்டுவது குறித்து தனது கள்ளக்காதலன் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து செல்லப்பனை கொலை செய்ய முடிவு செய்த பிரபு தனது நண்பர்களான தினேஷ் மற்றும் குமரவேல் ஆகியோரின் உதவியுடன் செல்லப்பனை கொலை செய்துள்ளார். செல்லப்பனின் பக்கத்துக்கு வீட்டு பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பிரபுவை கைது செய்தனர்.
கைது செய்த பிரபுவிடம் விசாரணை மேற்கொண்ட போது ரவுடி பிரபுக்கும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டு தன்னுடனும் தொடர்பில் இருக்குமாறு அப்பெண்ணை செல்லப்பன் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் நண்பர்களின் உதவியோடு அவரைத் தீர்த்து கட்டியதாக பிரபு மற்றும் அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். வீட்டிற்கு வெளியில் படுத்து உறங்கிய விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.