சேலம் மாவட்டம், இளம்பிள்ளை தெப்பக்குட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்த சாமி என்பவரின் மகன் 35 வயதுடைய பார்த்திபன். இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கும் தருமபுரி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவற்றின் மனைவியான 33 வயதுடைய சாலா என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நேரில் சந்திக்க தொடங்கியுள்ளனர்.
பின்னர் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி நேரில் சந்தித்து இருவரும் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சாலா குடும்ப செலவிற்காகவும் தனிப்பட்ட தேவைக்காகவும் பார்த்திபனிடம் அடிக்கடி பணம் வாங்கியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்திபன் தனது தேவைக்காக சாலாவிடம் பணம் கேட்டபோது அவர் பணத்தை திருப்பி தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருவரும் தனிமையில் இருக்க ஏற்காடு சென்று அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கின்றனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பார்த்திபன் சாலாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது ஊருக்கு தப்பி சென்றிருக்கிறார். பின்னர் தனக்கு தெரிந்த வாக்கில் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணுடன் ஏற்காடு வந்ததாகவும் இங்கு அந்த பெண்ணை கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வக்கீல் இது குறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஏற்காடு போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தனியார் விடுதியின் அறை ஒன்றில் சாலா அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதை தொடர்ந்து சாலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை சேலம் அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தனது ஊரில் தலைமறைவாக இருந்த பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பார்த்திபன் ‘கடந்த 3 ஆண்டுகளாக சாலாவுடன் பழகி வந்ததாகவும் நேற்று நாங்கள் இருவரும் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உல்லாசமாக இருக்கும்போது சாலா தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.