சென்னை சாலிகிராமம் வீட்டில் . ஐடி ஊழியர் சந்தேகமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் கடம்பை பகுதியை சேர்ந்தவர் நேதாஜி இவர் சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியில் திருமணமாகாமல் தனியாக கடந்த இரண்டு வருடமாக வாடகைக்கு வீடு எடுத்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது அறையில் இருந்து அதிகமான புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது படுக்கை மெத்தை எரிந்த நிலையில் மெத்தை அருகே நேதாஜி சுயநினைவின்றி கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செவிலியர்கள் பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் சிறு காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்