க்ரைம்

எஸ்பிஐ வங்கி  ஏடிஎம் கொள்ளையன் வீரேந்தர் ராவத் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டான்...

எஸ்பிஐ வங்கி  ஏடிஎம் கொள்ளை தொடர்பாக டெல்லியில் கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத் சென்னை அழைத்துவரப்பட்டார்.

Malaimurasu Seithigal TV

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ஒரு  கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர்  என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர் என்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத் இன்று மாலை விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.  ராயலா நகர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.