Admin
க்ரைம்

“தொடர்ந்து மூன்று வருடம்.. பல மாணவிகளை சீரழித்த ஆசிரியர்” - கைது செய்த குற்றவாளியை நடக்க வைத்து அழைத்து சென்ற ஆந்திர போலீஸ்!

11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சைலஜா இதனால் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டில் பள்ளிக்கு

Mahalakshmi Somasundaram

ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஜலபதி. இவர் வகுப்பறைக்கு செல்லும் போது மாணவிகளை பாராட்டுவது போல பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சைலஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜலபதி தொடர்ந்து அந்த சிறுமியை பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நிலையில் மாணவியை மிரட்டி வெளியில் அழைத்துச் சென்ற ஆசிரியர் ஆள்நடமாட்டம் இல்லாத மறைமுகமான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதே போல தொடர்ந்து மூன்று வருடங்களாக மாணவியை மிரட்டி வெளியில் அழைத்து சென்று சித்திரவதை செய்து வந்திருக்கிறார். தற்போது 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சைலஜா இதனால் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டில் பள்ளிக்கு செல்லவில்லை என தெரிவித்திருக்கிறார். எனவே மாணவியிடம் பெற்றோர்கள் கண்டித்து கேட்ட நிலையில் ஆசிரியர் தனக்கு செய்த கொடுமையை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து திருப்பதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது ஜலபதி மாணவி சைலஜா மட்டுமின்றி இது போல பல மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. எனவே பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் ஜலபதியை நேரடியாக பள்ளிக்கு சென்று கைது செய்த போலீசார் அவரை நகர காவல் நிலயத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் பின்னர் அவரை திருப்பதியின் முக்கிய வீதிகளில் நடக்க வைத்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.