க்ரைம்

அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோனுக்கு சீல்...!

Tamil Selvi Selvakumar

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மணஞ்சேரி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், பட்டாசு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், அவரது பட்டாசு கடை அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததை அறிந்த போலீசார், அங்கு இருந்த 300 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து செல்வகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், அவர் உரிய அனுமதியின்றி குடோன் அமைத்து பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வட்டாசியர் முன்னிலையில் அவரது பட்டாசு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.