க்ரைம்

குழிகளில் இருந்து தப்பிக்க முயன்று விபத்து; முதியவர் ஒருவர் பலி!

சாலைகளில் இருக்கும் குண்டு குழிகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது, இரு சக்கர வாகனத்தில் பயணித்த முதியவர் ஒருவர் லாரியில் நசுங்கி இறந்தார்.

Malaimurasu Seithigal TV

தனது மகளின் பைக்கில் பின்னாடி அமர்ந்திருந்த ஓட்டிச் சென்ற 65 வயது மூத்த குடிமகன் லாரி மோதி உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை பிவாண்டியில் உள்ள நாடி நாகா அருகே கம்வரி ஆற்றுப் பாலத்தில் பெண் ஒருவர் குண்டு குழிககளைத் தவிர்க்க முயன்றபோது பைக் சறுக்கி விபத்துக்குள்ளானது.

விஷ்வபாரதி துணி ஆலையின் முன்னாள் தொழிலாளியான அஷோக் குருநாத் கபாடி, 65 வயது முதியவர். கணேச உதசவம் நெருங்கி வருவதால், தனது மகள் அதிதி குருநாத் கபாடி (25)-யுடன் பிள்ளையார் பொம்மையையும், சில அலங்கார பொருட்களையும் வாங்க, அருகில் இருந்த மார்க்கெட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளனர். அப்போது, வண்டி சறுக்கியதால், குண்டு குழிகளில் விழாமல் இருக்க தடுமாறி இருக்கிறார் அதிதி. ஆனால், பின்னே வந்த லாரி இவர்களது வண்டியில் மோதியது. இதனால், லாரி டயரில் நசுங்கி, அஷோக் உயிரிழந்தார். வண்டி ஓட்டிய அதிதிக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்று இந்த விபத்து நடந்துள்ளது. கடும் மழை காரணமாக, பாலத்தில் பல மேடு பள்ளங்கள் இருந்திருக்கிறது. அவற்றில் சிக்காமல் இருக்க பார்த்து பார்த்து வண்டி ஓட்டியதாகக் கூறும் அதிதி, ஒரு குழியில் இருந்து தப்பிக்க முயன்ற போது, பின்னே வேகமாக வந்த் அலாரி, அவர்களை மோதியது என கூறினார்.

மனைவி, மகன் அனில், மகள் அதிதி, மற்றும் மருமகளுடன் வாழும் அஷோக், பிறந்ததில் இருந்து கணேச உதசவத்தைக் கொண்டாடி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

லாரி ஓட்டியவர், 50 வயதான தின்கர் கிர்ஜா பகாலே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிவாண்டி பகுதியில், கோனி கிராமத்தைச் சேர்ந்த இவரை, விபத்துக்குக் காரணமானவராக கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த பாலம் பல நாட்களாக மோசமான நிலையில் உள்ளதாகவும், பல விபத்துகள் சிறிய அளவில் அங்கு நடந்ததாகவும் கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் இந்த சம்பவத்தால் பரபரப்பு அடைந்துள்ளனர்.