க்ரைம்

14 வயது மருமகனுடன் பாலியல் உறவு... வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அத்தை...

ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுவனுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வசிக்கும் ஒரு பெண், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயதான தன் மருமகனை சந்திக்க, அடிக்கடி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு வருவது வழக்கம்.

அங்கு பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி, மருமகனுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்து உள்ளார். இதை, தன் முன்னாள் கணவர் உதவியுடன் மொபைல் போனில் அந்த பெண் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மருமகனை மிரட்டி, இதுவரை தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.

வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய், விசாரித்த போது அத்தையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுவனின் தாய் அளித்த புகார் அடிப்படையில், அந்த பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.