க்ரைம்

ஆள் நடமாட்டம் இல்லை.. தகராறு-க்கு பின் பாலியல் வன்கொடுமை.. ஆண் நண்பருடன் வந்தும்.. கொடுமை!!

Suaif Arsath

என்னதான் கடுமையாக சட்டங்கள் வந்தாலும் எதற்கும் அஞ்சாமல் இந்த கொடூரன்கள் பாலியல் குற்றங்களை  தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகின்றனர். ஆங்காங்கே பாலியல் வன்கொடுமை நடந்து தான் வருகிறது. இதற்கு இன்னும் கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த வரிசையில், கடலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் அதே பகுதியில் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி வேலையை முடித்து விட்டு நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார்.

இருவரும் கம்மியம்பேட்டை இணைப்புச் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நின்று இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள்.. கடலூர் திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சேர்ந்த சபரி என்கிற கிஷோர் (19), புதுப்பாளையத்தை சேர்ந்த ஆரிப் (19), குப்பன்குளத்தைச் சேர்ந்த சதீஷ் (19) ஆகியோர் பேசி கொண்டிருந்த அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

உங்களுக்கு இங்க என்ன வேலை..யார் நீங்கள், எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். செல் போனில் படமெடுத்தும் மிரட்டி உள்ளனர்.
 
பின்னர், அந்த பெண்ணை மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவதில் ஈடுபட்ட சதீஷ், ஆரிப், சபரி ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.