இணையத்தில் ஆண்கள், தங்கள் மனைவி மற்றும் தங்கள் காதலியை எவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பதை கற்பிக்கும் 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'டார்க் வெப்' மூலமாக இயங்கிய இந்த பயிற்சிப்பள்ளியில் 62 மில்லியன் ஆண்கள் பதிவு செய்த நிகழ்வு உலகெங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
'சிஎன்என் அஸ் ஈக்வல்ஸ்' நடத்திய பல மாத கால புலனாய்வு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை வணிகமயமாக்குவது நிகழ்வு இணையத்தையே உலுக்கியது. மேலும், Motherless என்ற ஒரு ஆபாச இணையதளத்தில், பயனர்களால் பதிவேற்றப்பட்ட, "தூக்கத்தில் இருக்கும்போது செய்யும் பாலியல் வன்கொடுமை" தொடர்பான 20,000-க்கும் மேற்பட்ட காணொளிகள் அதில் இருந்துள்ளன. அவை லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 62 மில்லியன் வருகைகளை இந்த இணையப்பக்கம் பெற்றதும், அமெரிக்காவை முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டதுமாக இந்த இணையதளம் இருக்கிறது. இந்த வீடியோக்களில், பெண்கள் தூங்குகிறார்கள் அல்லது மயக்க நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக, ஆண்கள் அவர்களின் மூடிய கண் இமைகளைப் படம் பிடித்து அந்த இணையதளத்தில் பதிவிட்டுவந்துள்ளனர். இதுபோன்ற வீடியோக்கள் 50,000 பார்வைகளைத் தாண்டியுள்ளன. ஜெர்மானிய புலனாய்வுப் பத்திரிகையாளர்களான 'இசபெல் பீர்' மற்றும் 'இசபெல் ஸ்ட்ரோ' ஆகியோரால் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்ட, Motherless என்ற இணையப்பக்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் துணைவியர்களுக்கு எப்படி மயக்க மருந்து கொடுப்பது? என்பது குறித்த ஆலோசனைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வந்துள்ளனர்.
'Motherless' பயனர்கள் “Zzz” என்ற அரட்டைக் குழுவிலும் அவர்கள் அதையே செய்கிறார்கள். பயனர்கள் தாங்கள் பயன்படுத்துவதாகக் கூறிய குறிப்பிட்ட மருந்துகளின் பெயர்களையும் அளவுகளையும் அதில் தங்கள் சக பயனர்களோடு பகிர்ந்துள்ளார். 'Motherless' பயனர் ஒருவர், வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் உள்ள ஸ்பெயினின் ஒரு சிறிய தனித்தீவான சியூட்டாவில் வசிப்பதாகக் கூறிய அந்த நபர், தனது டெலிகிராம் கணக்கில், சுவையற்ற மற்றும் மணமற்ற அந்தத் திரவத்தின் ஒரு பாட்டிலுக்கு 150 யூரோக்கள் (சுமார் $175) செலவாகும் என்று கூறியுள்ளார். "உங்கள் மனைவி எதையும் உணரமாட்டார், எதையும் நினைவில் கொள்ளவும் மாட்டார்," என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த மருந்துகளை உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் இவரால் அனுப்பமுடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போதைப்பொருளால் சுயநினைவின்றி இருக்கும் தங்கள் துணைவியார் மீதோ அல்லது தங்கள் காதலி மீதோ நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமையை இந்த இணையப்பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வதாகவும், இதற்காக ஒரு பார்வையாளருக்கு 20 டாலர் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
16 ஆண்டுகளாகத் தன் கணவராக இருந்தவர், தன் மகனின் தூக்க மாத்திரையைத் தன் மனைவிக்கு தேநீரில் கலந்துக் கொடுத்து வந்ததையும், அவர் மயக்கமடைந்திருந்த நேரத்தில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததையும் அறிந்தபோது, ஸோயி வாட்ஸ் என்ற பெண்ணின் மொத்த உலகமும் இருண்டு போனது. நான்கு பிள்ளைகளைப் பெற்ற அந்தத் தம்பதியினர் 2018-ம் ஆண்டில் ஒருநாள் வழக்கம் போல தேவாலயத்திலிருந்து திரும்பியபோது இந்த விஷத்தை அவரின் மனைவிடம் கூறியுள்ளார். "அவர் ஷாப்பிங் பட்டியலைப் போல தனது தவறுகளின் பட்டியலை, மிகவும் சரளமாக தன் மனைவியிடம் அடுக்கியிருக்கிறார்," என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் வாட்ஸ் கூறியிருக்கிறார். அவர் கூறியது, "உன்னைக் கட்டிப்போடுவதற்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், உன்னைப் பாலியல் வன்புணர்வு செய்வதற்கும், நம் மகனின் தூக்க மாத்திரையை இரவில் உன் கடைசி கோப்பை தேநீரில் கலந்து தருவேன்" என்ற விஷயத்தை அவரின் மனைவியிடம் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நாள் களைப்பாக இருக்கும்போது தன் கணவர் தனக்காக தேநீர் தயாரித்து தருவதற்காக தான் நன்றியோடும், அந்த காதலை நினைத்து மகிழ்ச்சியாக இருந்த அவரின் மனைவிக்கு தன் கணவரின் இந்த வாக்குமூலம் பேரிடியாக இறங்கியது. முதலில் இதை ரகசியமாக வாட்ஸ் வைத்திருந்தாலும், அவரின் உடல் நலம் மோசமானதை அடுத்து இதுகுறித்து தன் சகோதரிடம் கூறியிருக்கிறார். பின்பு, அவரின் தாய்க்கு தெரிந்த பின்பு காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. 4 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பின்னர் தற்போது இருவரும் பிரிந்துள்ளனர். இதற்காக அவரது முன்னர் கணவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் கூறினார். மேலும், இங்கிலாந்தில் ஒரு பெண், தன்னுடைய காதலன் தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். தான் எவ்வாறு உறங்குகிறோம் என்பது தெரியாமலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவதாகவும், எழுந்து பார்க்கும்போது அவரின் உடலில் காயங்களுடனும், வேறுபட்ட ஆடைகளுடனும், கீழே ஒரு துண்டுடனும் கண்விழிப்பதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து ஒருகட்டத்தில் அப்பெண் உணர்ந்து தன் காதலனிடம் கேட்டபோது, ‘நீ அதிகப்படியான மருந்து எடுத்துக்கொள்கிறாய். நீதான் அதை கற்பனை செய்துகொள்கிறாய். அப்படி எதுவும் நடக்கவில்லை. உனக்கு மனநிலை சரியில்லை. நீ ஒரு பைத்தியம்,’ என்று அவர் பெண்ணிடம் கூறி மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். ஆனால், இறுதியில் காவல்துறையிடம் புகாரளித்தார் அப்பெண். ஆனால் வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே அப்பெண்ணின் காதலர் தற்கொலை செய்த்துள்ளார்.
வட இத்தாலியில் வசிக்கும், இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், இருபது ஆண்டுகளாகத் தன் கணவராக இருந்தவர், அப்பெண்ணுக்கு மது மற்றும் மயக்க மருந்துகளைக் கொடுத்து மயக்கிய பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்வதை படம்பிடித்திருந்த காணொளிகளைக் கண்டறிந்தபோது ஏற்பட்ட கொடூரத்தை அவர் நினைவுகூர்ந்தார். "அந்த வீடியோக்களைக் கண்டுபிடித்தது என் அதிர்ஷ்டம், ஏனென்றால், எனக்கு எந்தக் காயத் தழும்புகளும் இல்லாததால், உண்மையிலேயே மற்றவர்கள் அதை நம்புவது சற்று கடினமாக இருந்திருக்கும்," என்று அவர் கூறினார். 2021-ல், அப்பெண்ணின் முன்னாள் கணவருக்குப் பாலியல் வன்கொடுமைகளுக்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து, அப்பெண்கள் புகாரளிக்க முதலில் சென்றபோது பலர், அது பரஸ்பர சம்மதத்துடன் நடந்த ஒரு 'பாலியல் விளையாட்டின்' ஒரு பகுதி என்று நம்பியதாகத் தங்கள் தரப்பு வாதத்தை அப்பெண்கள் முன்வைத்தனர்.
அமெரிக்காவில் இந்தத் தளத்தின் பிரபலத்திற்கு, தகவல் தொடர்பு ஒழுக்கச் சட்டத்தின் பிரிவு 230 ஒரு பகுதிக் காரணமாகும் என்றும் இப்பிரிவு, பயனர்கள் பதிவேற்றும் உள்ளடக்கத்திற்கான பொறுப்பிலிருந்து தளங்களைப் பாதுகாத்து வருகிறது. இந்தச் சட்டம், "தனிநபர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது" என்று அந்த விசாரணை குறிப்பிட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.