க்ரைம்

பெண் ஆசிரியைக்கு செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவு....அரசு பள்ளி ஆசிரியர் கைது...!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடியில்  அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்களாக பரமக்குடியை சேர்ந்த மலர்விழி,  நாகாச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆசிரியர் சந்திரன் பெண் ஆசிரியை மலர்விழிக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து மலர்விழி சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சத்திரக்குடி போலீசார், ஆசிரியர் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.