sexual harrasment happend in hospital 
க்ரைம்

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா!?? மனநோயாளியிடம் பாலியல் சீண்டல்..!காவலாளி கைது!!

இரவு தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் ....

Saleth stephi graph

சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று இரவு மனநல நோயாளிகள் சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளம்பெண்ணிடம் தனியார் ஒப்பந்த காவலாளி பழனிவேல் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.(இரவு தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுத்து அந்தரங்க உறுப்பை கடித்துள்ளார்) இதுகுறித்து இளம்பெண்ணின் தாத்தா அளித்த புகாரின் பேரில் சேலம் அரசு மருத்துவமனை புறகாவல் நிலைய போலீசார் பழனிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.