க்ரைம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட பெற்றோருக்கு கொலைமிரட்டல்... வாலிபர் போக்சோவில் கைது... 

பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூண்டிகாலனியைச் சேர்ந்த செந்தில் மகன் சந்துரு வயது 20 இவர் அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயதுள்ள மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலிப்பதாகவும் அதனால் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரிய வரவே இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர்கள் சந்துருவிடம்  போய் ஏன் இப்படி  செய்தாய் என்று கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததால் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட விசாரணையில் சந்துரு ஒப்புக்கொண்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.