க்ரைம்

“நள்ளிரவில்.. கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” -மாமனாரை கழுத்தறுத்து கொன்ற மருமகள்! பல்லாவரத்தில் அதிர்ச்சி சம்பவம்?

நேரில் சென்று பெருமாளின் பிணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மீனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Lakshmi

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த பெண் மீனா (28). இவரின் கணவர் மணிகண்டன் உடல் நிலை சரியில்லாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இந்த நிலையில் மீனா, அவரின் 8 வயது மகளுடன், மாமனார் பெருமாள் (58), மாமியார் பத்மா (54) ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மீனாவுக்கு அடிக்கடி மாமனார் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மீனா அவரை கண்டித்ததுடன், தனது மாமியாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பெருமாளின் மனைவி பத்மா கோவித்துக்கொண்டு அவரின் தாய் வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.

இதனால் மீனா, அவரின் மகளுடன் தனியாக இருந்து வந்துள்ளார். தனது மாமனாரின் பாலியல் தொல்லைக்கு பயந்து, உறவினர் குழந்தையை துணைக்கு அழைத்துள்ளார். இரவு மூன்று பேரும் அறையில் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெருமாள் கதவை தட்டியுள்ளார். முதலில் கதவை திறக்காமல் இருந்த மீனா, ஒரு கட்டத்திற்கு மேல் கதவை திறந்துள்ளார். என்ன வேண்டும் என கேட்டதற்கு அவரிடம் தவறாக பேசி, பலியால் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் அவரை தடுக்க முடியாமல், தன்னை காத்துக்கொள்ள அங்குள்ள அறிவாள் மனையை கொண்டு பெருமாளின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த மாமனாரை, அருவமனையை கொண்டு கழுத்தை அறுத்துள்ளார். இரவில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பெருமாள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடைந்துள்ளார். அதையடுத்து அப்பகுதினர் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று பெருமாளின் பிணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மீனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் இறந்து மூன்று மாத துக்கத்தில் இருந்த மருமகளை பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்திய மாமனாரை அறிவாள் மனையால் கழுத்து அறுத்து கொன்று தன்னை காத்துக் கொண்ட பெண்ணின் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.