க்ரைம்

நகைகள் காணாமல் போனதாகக் கூறி செவிலியரை அடித்த அவலம்- வைரலாகும் வீடியோ  

நகைகள் காணாமல் போனதாகக் கூறி செவிலியரை அடித்து துன்புறுத்தியதாக ஹெல்த் கேர் நிறுவன உரிமையாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

Malaimurasu Seithigal TV

மயிலாடுதுறையை சேர்ந்த ஜோதிகா(20) என்ற பெண், செவிலியர் படிப்பு முடித்து சென்னை அரும்பாக்கம் கண்ணதாசன் தெருவிலுள்ள பிரவீனா ஹோம் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த நிறுவன அறையில் நகைகள் காணாமல் போனதாக நிறுவன உரிமையாளர் பிரபாவதி அவரது கணவர் ராஜா மற்றும் ஜோதிகாவுடன் தங்கியிருந்த சந்தியா மற்றும் தமிழ்மலர் ஆகியோர் கடந்த 30 ஆம் தேதியிலிருந்து 4-ம் தேதி வரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதனால் பயந்து போன ஜோதிகா தனது சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.

சொந்த ஊருக்கு சென்ற ஜோதிகா அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்ததால், அவரது பெற்றோர் மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் விசாரணையில் ஜோதிகா நடந்ததை கூறியுள்ளார். மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் ஜோதிகா அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.