கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் தாக்க முயன்ற வழக்கில் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறையில் உள்ள கார்த்திக் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்திற்கும், இளைஞரின் தந்தை நடத்தி வரும் இறைச்சி கடைக்கும் மர்ம கும்பல் தீவைத்து சென்றது.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தற்பொழுது இளைஞர் உள்ள குழுவிற்கும், மற்றொரு குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதும், இதனால் எதிர்தரப்பை சேர்ந்த கும்பல் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து அசாம்பவிதங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.