Villupuram crime news Villupuram crime news
க்ரைம்

"வயிற்றில் கட்டிதான் வேற ஒன்னும் இல்ல.." கள்ளகாதலனால் ஏற்பட்ட கர்ப்பத்தை மறைத்த மனைவி! குழந்தையை 'ஏரியில் வீசிய' கொடூரம்

கணவரிடம் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி கர்ப்பத்தை மறைத்து ஏமாற்றி வந்துள்ளார்.

Vinvizhi Leninton

விழுப்புரம் நகர பகுதியான நான்கு முனை சந்திப்பு அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு ஒன்று வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்பவர், கடந்த 07.07.2026 அன்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நண்பகலில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அதே நாள் இரவு அன்று சுதா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யாமல் மருத்துவமனையிலிருந்து குழந்தையுடன் வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சுதா வீட்டிற்கு சென்று விசாரனை செய்துள்ளனர். அப்போது சுதா, குழந்தை வீட்டிற்கு வரும் வழியிலையே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் காணையிலே குழந்தையின் உடலை புதைத்ததாகவும், அதன் பின்பு குப்பையில் வீசியதாகவும் மாறி மாறி போலீசாரிடம் கூறியுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை கொடுத்துள்ளது.

இதனையடுத்து போலீசார் சுதாவிடம் கிடுக்குபிடி விசாரணை செய்தபோது சுதா அதே பகுதியை சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் அவர் கர்ப்பமும் ஆகியுள்ளார். ஆனால் சுதா தனது கணவரிடம் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி கர்ப்பத்தை மறைத்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குழந்தை பிறந்ததால் தனது கள்ளக்காதலன் யோகலிங்கத்துடன் இணைந்து காணை பகுதியில் உள்ள ஏரி நீரில் குழந்தையை அமுக்கி கொலை செய்து கற்களை கட்டி தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஏரியில் சடலமாக குழந்தையை மீட்ட போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குழந்தையை ஏரி தண்ணீரில் முழுக வைத்து கொடூரமாக கொலை செய்த சுதா மற்றும் யோகலிங்கத்தை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததன் காரணமாக பிறந்த பெண் குழந்தையை பிறந்த சிலமணி நேரத்திலேயே தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கொடூரமாக ஏரி நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறையில் அடைக்கப்பட்ட சுதாவிற்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகனும் யோகலிங்கத்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.