Sullan Madhan Murder Case 
க்ரைம்

“சுள்ளான் மதன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்” - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. யார் இந்த மிதுன் மாணிக்கம்?

அந்தக் கும்பல், சுள்ளான் மதனை ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது...

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம், மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ரவுடி சுள்ளான் மதனை, நேற்று முன்தினம் (அக் 18) மர்ம கும்பல் கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய மதன் என்ற சுள்ளான் மதன். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனக்கு எதிரானவர்களை மிரட்டும் வகையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுள்ளான் மதன், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுள்ளான் மதன் சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கரும்புத் தோட்டத்திற்குள் விரட்டிச் சென்ற அந்தக் கும்பல், சுள்ளான் மதனை ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sullan Madhan Murder Case

இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு சுள்ளான் மதன் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய சகோதரர்களை மஞ்சுவிரட்டி தகராறில் இரட்டை கொலை செய்திருந்தார். எனவே ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் தரப்பினர் பழிவாங்க இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார். பின்னர் முதற்கட்டமாக திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரதீப் 26 மானாமதுரை உடகுளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19), A.விளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பாபு (23), ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு சிவகங்கையில் வெட்டிக்கொல்லப்பட்ட ராஜேஷ் கொலைக்கு பழிவாங்க இந்த கொலையை செய்ததாக கூறினார். ஆனால் ராஜேஷ் கொலைக்கும் சுள்ளான் மதனுக்கு எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவர்கள் வாக்குமூலத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சுள்ளான் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மிதுன் மாணிக்கம் மற்றும் முத்து சூர்யா, சந்தோஷ், விக்னேஷ் ஆகிய நன்கு பேரை கைது செய்தனர்.

பின்னர் இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கான முழுக்காரணமும் வெளிச்சத்திற்கு வந்தது ராஜேஷ் கொலையின் முக்கிய குற்றாவாளியான அருண் பாண்டியன், சுள்ளான் மதனின் நெருங்கிய நண்பர் என சொல்லப்படுகிறது. எனவே அருண் பாண்டியன் ராஜேஷை கொலை செய்ததும் மதன் தனது ஸ்டோரியில் “முடிச்சிட்டோம் ல” என ஸ்டேட்டஸ் வைத்தததாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த ராஜேஷின் நண்பரான மிதுன் மாணிக்கம், சுள்ளான் மதன் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக சுள்ளான் மதன் மற்றும் மிதுன் மாணிக்கம் இடையே அடிக்கடி சமூகவலைத்தளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Sullan Madhan Murder Case

அப்போது ஒரு கட்டத்தில் சுள்ளான் மதன், மிதுனான் தாய் குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. எனவே ஆத்திரமடைந்த மிதுன் மாணிக்கம் சுள்ளான் மதனை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்து அவர் ஜாமினில் வந்த உடன் தனது கூட்டாளிகளுடன் கொலை செய்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில், இரட்டைக் கொலை சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ராஜேஷ் கொலை வழக்குடன் தொடர்புடைய பழிவாங்கும் பின்னணி விசாரணையில் தெரியவந்துள்ளது விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.