க்ரைம்

குப்பைத்தொட்டியில் பெண் சிசுக்களின் உடல்!!

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் குறை மாதத்தில் பிறந்த இரண்டு பெண் சிசு உடல்களை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பட்டி பகுதியில் பிலோமினாள் தொடக்கப்பள்ளி சுற்று சுவர் அருகே  பெரிய குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவரும் அங்கு குப்பைகளை கொட்டுவது வழக்கம். இந்நிலையில், காலை குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக தூய்மை பணியாளர்கள் அங்கு வந்து குப்பைகளை எடுக்கும் பொழுது, எதோ வினோதமாக இருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அதில் குறை மாதத்தில் பிறந்த இரண்டு பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்துள்ளது. அதில் ஒரு குழந்தையின் உடலை, அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் கடித்து குதறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்து போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிசுக்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மனிதநேயமின்றி சிசுக்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.