poovayi and moganraj  
க்ரைம்

“முகத்தில் மிளகாய் பொடி தூவி மனைவியை அடித்த கணவன்” - தாயை காப்பாற்ற நினைத்து மகன் செய்த செயல்.. ரத்தம் சிதறி இறந்து கிடந்த மோகன்ராஜ்!

வெகு நேரமாக மோகன்ராஜ் படுத்த நிலையில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில்..

Mahalakshmi Somasundaram

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளியான 47 வயதுடைய மோகன்ராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூவாயி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஹரிதா மற்றும் மணிகண்டன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஹரிதாவிற்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். மேலும் 21 வயதுடைய மணிகண்டன் குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த மோகன்ராஜ் நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. மேலும் குடிபோதையில் மனைவி பூவாயி, மணிகண்டன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்களிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல கடந்த (மே 21) ஆம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மோகன்ராஜ் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மோகன்ராஜ் பூவாயி மீது மிளகாய் பொடி தூவி தாக்க முற்பட்டுள்ளார். அப்போது மகன் மணிகண்டன் தடுக்க முயன்ற போதும் அடங்காமல் இருவரையும் தாக்கியுள்ளார். எனவே தந்தையிடமிருந்து தாயை காப்பாற்ற மணிகண்டன் அவரது தந்தையை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து மோகன்ராஜ் தாக்கியதில் மனைவி பூவாயி மகன் மணிகண்டன் இருவருக்கும் உள் காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் வெகு நேரமாக மோகன்ராஜ் படுத்த நிலையில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் சத்தம் போட்டு எழுப்ப முயற்சி செய்தபோது தலையில் ரத்தம் சிதறி அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது .

எனவே இதுகுறித்து உயிரிழந்த மோகன்ராஜ் உறவினர்கள் நங்கவரம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் நங்கவரம் போலீசார் உயிரிழந்த மோகன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளான பூவாயி மற்றும் மணிகண்டன் சிகிச்சையில் இருப்பதால் இருவரும் தப்பி செல்லாத வகையில் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.