க்ரைம்

தாய் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் வெட்டிக் கொலை செய்த மகன்!

தாயின் கண் முன்னே தந்தைக்கு 14 இடங்களில் கத்திக்குத்து மகன் வெறி செயல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருப்பத்துார் | கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(62), அதே பகுதியில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு வெற்றி செல்வன்(36),என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். 

ஆதிமூலத்துகு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் மகன் வெற்றி செல்வன் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் செய்த பிரச்சனைகள் தாண்டி ஆதி மூலம் நடத்தி வந்த டைலர் கடைக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு கேட்டாலும் வண்டி கிடையாது என பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலை வைத்து 14 இடங்களில் சரமாரியாக கொடூரமாக குத்தி அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஆதிமூலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து டிஎஸ்பி கணேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு சென்னைக்கு தப்பியோட முயன்ற வெற்றிச்செல்வனை திருப்பத்துார் பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பணத்திற்காக தனது தந்தையே கொலை செய்ய மகன் துணிந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.