க்ரைம்

வீட்டிற்கு வந்த 1st மனைவி மகன்...ஜாடமாடையாக திட்டிய சித்தி..ஆத்திரத்தில் தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் குத்திய son!!

குடும்ப பிரச்சனையில் தந்தையின் இரண்டாவது மனைவியை கத்தியால் குத்திய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

சேலம் மாவட்டம் அழகாபுரம் அருகே உள்ள பெரியபுதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், கிருஷ்ணன் நேற்று 2-வது மனைவியான நிர்மலா வீட்டில் இருந்து உள்ளார். அவரை பார்ப்பதற்காக முதல் மனைவியின் மகன் சந்தோஷ் என்பவர் நிர்மலா வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது சந்தோஷை பார்த்து நிர்மலா ஒருமையில் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் சித்தியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு முற்றியதில் கோபம் அடைந்த சந்தோஷ் அங்கு இருந்த கத்தியை எடுத்து சித்தி நிர்மலாவை குத்திவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.

இதனிடையே குத்துப்பட்ட நிர்மலா வலியில் துடித்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த கணவன் கிருஷ்ணன், உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் நிர்மலாவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சித்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து ஓடிய சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்.