sona vs shankar 
க்ரைம்

"எனக்கு ஷங்கர் வேணும்.. அவர் இப்போ இங்க வரணும்! - பெட்ஷீட் விரித்து வாசலில் உட்கார்ந்த நடிகை சோனா! என்ன ஆச்சு!?

அது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாகவும்....

Anbarasan

நடிகை சோனா fefsi அலுவலகத்திற்கு முன்பு இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பால கோபி மற்றும் சங்கர் என்ற இருவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

இதுகுறித்து அவர், 'நான் தயாரித்து வரும் படத்திற்கு சூட்டிங் செய்ய அனுமதியளிக்கவிட்டாலும், ஹார்டு டிஸ்க் மட்டும் கொடுங்கள் என்று கேட்ட போது 40,000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர், ஆனால் அதை கொடுத்தும் ஹார்டு டிஸ்க் கொடுக்க மறுத்ததாகவும், மீண்டும் இதை பற்றி கேட்டால் மேலும் 1,20,000 கேட்டதாகவும் சொல்கிறார் சோனா.

அது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாகவும் கூறுகிறார்.

"அந்த ஊசி போடாதீங்க"! சொல்ல சொல்ல யாரும் கேட்கலயே.. வயிற்றிலேயே இறந்த "இரட்டை குழந்தைகள்"! தாய் கண் முன்னே அரங்கேறிய "கொடுமை"

இதைப்பற்றி கேட்க பால கோபியை போனில் அழைத்தபோது "நீ தான் எதுனாலும் போலீஸ் கிட்ட கம்ளைன்ட் பண்ணுவியே இதையும் சொல்லு" என ஆணவமாக பதிலளித்த தாகவும், ஹார்டு டிஸ்க் குப்பையில் இருக்கும் தேடனும் என சொல்லியிருக்கிறார்.

இவர்கள் எல்லாம் ஏன் அந்த சங்கரை இவ்வளவு பாதுகாக்கிறார்கள், அவ்வளவு பெரிய ஆள அவர், அப்படி என்றால் அவரை நான் நேரில் பார்க்க வேண்டும், என்பதே சோனாவின் கோரிக்கையாக உள்ளது.

சங்கரை நேரில் பார்க்கும் வரை நான் இங்கேயே தான் காத்திருப்பேன், என பெப்சி அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறார் சோனா.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்