க்ரைம்

ஏடிஎம் கொள்ளை வழக்கு: வடமாநிலத்தில் தனிப்படை முகாம் அமைத்த போலீசார்!

Tamil Selvi Selvakumar

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் உட்பட இரண்டு பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்மில் நிகழ்ந்த கொள்ளை சம்பத்தில், கொள்ளையர்கள் ஏடிஎம்களில் இருந்த 73 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் இது தொடர்பான வழக்கில், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அப்போது அரியானாவில் வைத்து, முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், இருவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில், மீதமுள்ள 8 பேரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் போலீசார், அதற்காக வடமாநிலத்தில் தனிப்படை முகாம் அமைத்து தேடி வருகின்றனர்.