க்ரைம்

போக்சோ வழக்குகளில் கைதான ஆசிரியர்களுக்கு கடுங்காவல் தண்டனை...

சிவகங்கை மாவட்டத்தில், போக்சோ வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆசிரியர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2015ம் ஆண்டு அப்பள்ளி ஆசிரியர் ரங்கராஜன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. அவர் மீதான வழக்கினை விசாரித்து வந்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்,  குற்றம் நிரூபிக்கப்பட்ட ரங்கராஜனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்க கூறி தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு, பிரான்மலை மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி ஆசிரியர் சரவணன் மீது வழக்கு பதியப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிவகங்கையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,  சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சம் ரூபாயை நிவாரண தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.